Showing posts with label The Spirit of Thiruvalluvar. Show all posts
Showing posts with label The Spirit of Thiruvalluvar. Show all posts

Wednesday, November 27, 2013

The Spirit of Thiruvalluvar :கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் ....


திருக்குறள் 

பொருட்பால்  

அமைச்சியல்
அதிகாரம் 67

குறள்  : 663

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் 
எற்றா விழுமந் தரும்.

செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.



Man's fitting work is known but by success achieved; 
In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.
.

  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

Tuesday, November 26, 2013

The Spirit of Thiruvalluvar : ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு .....ஆழி எனப்படு வார்.



திருக்குறள் 

பொருட்பால்

குடியியல்


அதிகாரம் 99

சான்றாண்மை


குறள்  : 989

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 
ஆழி எனப்படு வார்.

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.

Call them of perfect virtue's sea the shore, 
Who, though the fates should fail, fail not for evermore.

  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

Monday, November 25, 2013

The Spirit of Thiruvalluvar :ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்



திருக்குறள் 

பொருட்பால்

குடியியல்


அதிகாரம் 99

சான்றாண்மை


குறள்  : 985


ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 
மாற்றாரை மாற்றும் படை.


ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே,
ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால்
அதுவே பகைமையை மாற்றுகின்ற
படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
Submission is the might of men of mighty acts;
 the sage With that same weapon stills his foeman's rage.

  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194





Saturday, November 23, 2013

The Spirit of Thiruvalluvar :அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்




திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 62
ஆள் வினை உடைமை 
குறள்  : 611

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்.

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல்,
முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்
அதுவே பெரிய வலிமையாக அமையும்..
Say not, 'Tis hard', in weak, desponding hour, 
For strenuous effort gives prevailing power.

  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்

Friday, November 22, 2013

The Spirit of Thiruvalluvar :ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.




திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 62
ஆள் வினை உடைமை 
குறள்  : 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர்.

சாலமன் பாப்பையா :
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர்,
விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

Who strive with undismayed, 
unfaltering mind, 
At length shall leave opposing fate behind.

  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

Thursday, November 21, 2013

The Spirit of Thiruvalluvar :முயற்சி திருவினை ஆக்கும்

 


திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 62
ஆள் வினை உடைமை 
குறள்  : 616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. 
முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் 
காரணமாக அமையும்.

Effort brings fortune’s sure increase, 
Its absence brings to nothingness.

  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் 
  • மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

Wednesday, November 20, 2013

The Spirit of Thiruvalluvar :தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.


 


திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 62
ஆள் வினை உடைமை 
குறள்  : 619


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

சாலமன் பாப்பையா :
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், 
முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

Although it be said that, through fate, 
it cannot be attained, 
yet labour, 
with bodily exertion,
 will yield its reward.


  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

Tuesday, November 19, 2013

The Spirit of Thiruvalluvar :கொக்கொக்க கூம்பும் பருவத்து ......




திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 49
காலமறிதல்
குறள்  : 490


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

சாலமன் பாப்பையா :
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல்
 தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

At the time when one should use self-control,
 let him restrain himself like a heron;
 and, let him like it, strike,
 when there is a favourable opportunity.


  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்






Saturday, November 16, 2013

The Spirit of Thiruvalluvar : பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்.....




திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 49
காலமறிதல்
குறள்  : 481

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

மு.வ : காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், 
அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

A crow will overcome an owl in the day time; 
so the king who would conquer his enemy
 must have (a suitable) time.

  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380


Friday, November 15, 2013

The Spirit of Thiruvalluvar : ஊக்க முடையான் ஒடுக்கம் .....




திருக்குறள் 

பொருட்பால்
அரசியல் 
அதிகாரம் 49
காலமறிதல்
குறள்  : 486


ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

சாலமன் பாப்பையா : 
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது
 சண்டையிடும் ஆட்டுக்கடா,
 தன் பகைமீது பாய்வதற்காகப்
 பின்வாங்குவது போன்றதாகும்.

The self-restraint of the energetic
 (while waiting for a suitable opportunity),
 is like the drawing back of a fighting-ram in order to butt.

  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்