Wednesday, September 18, 2013

கல்வி கடன்களால் வங்கிகளுக்கு சிக்கலா ?








தொழிற்துறையில் நிலவும் தொடர் மந்த நிலையால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி கடன்களை வாரி வழங்கி வரும்  நமது வங்கிகள்  கடன்களை திரும்ப வசூலிப்பதில் தற்போது சிக்கலை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. லட்சக்கணக்கில் கடன்களை வாங்கி பட்டங்களை பெற்ற நமது மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வருகிறது. புதிதாக படிப்பை முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும் மாணவர்களுக்கு தற்போது எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூ நடப்பது குறைந்து வருவதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் இதுவரை சுமார் 24 லட்சம் மாணவர்கள் கல்விக்கடன்களை பெற்று உள்ளனர். அதில் ஏறத்தாழ 75 சதவிகித மாணவர்கள் நடுத்தர வகுப்பை சார்ந்தவர்கள். எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற இவர்களின் நம்பிக்கை தொழிற்துறை
 தற்போது சந்தித்து வரும் நெருக்கடியால் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. 2006-07-ம் ஆண்டுகளில் 2 சதவிகிதமாக இருந்த கல்வி வராக்கடன் தற்போது 6 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.

 இதனால் வங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. புதிய வேலைவாய்ப்பில் மந்தநிலை, கல்விக்கடனை திருப்பி செலுத்துவதில் இழுபறி  போன்ற காரணிகளால்  சத்தமில்லாத ஒரு  நெருக்கடி நிலையை மாணவர்கள் சந்தித்து வருகிறார்கள். 

இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் கல்விக்கடன் வழங்குவதை வங்கிகள் மறுபரிசீலனை செய்வதோடு அரசும் இதுகுறித்து விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கலாம். இதனால் கோடிக்கணக்கான இந்திய  இளைஞர்களின் கல்வி கேள்விக்கு உள்ளாகலாம்.
 இவற்றை எல்லாம் சரி செய்து மாணவர்களின் எதிர்கால நலனையும், வங்கிகளின் வராக்கடன் அச்சதையும் போக்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமை.

The Manangement Tip of The Day :A 1-Minute Trick for Better Negotiations

THE MANAGEMENT TIP OF THE DAY: Harvard Business Review

September 18, 2013



How do you negotiate better? 

Simple: Beforehand, take a minute or two to focus on what you have to gain and what you hope to achieve – and banish all thoughts of what you might lose.

 List everything you hope to accomplish and the ways you will benefit if you are successful. Re-read this list just before the negotiation begins. 

Throughout the exercise, it’s important to try not to focus on what could go wrong. 

Great negotiators stay focused on their ideal target, despite the risks they face.

 With practice, this focus-training will become easier and, eventually, automatic. 

Adapted from “The One-Minute Trick to Negotiating Like a Boss,” by Heidi Grant Halvorson.

வங்கி கடன்... முன்கூட்டியே கட்டினால் நஷ்டமா ? சந்தேகங்கள்...தீர்வுகள் !






 
- இரா.ரூபாவதி, படம்: ஜெ.வேங்கடராஜ்.
 
அவசர தேவைக்காக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, எப்போது பணம் கிடைக்கும் என்றுதான் காத்திருப்போம். அதே கடனை திரும்பக் கட்டும்போது, கடன் எப்போது முடியும் என்று காத்திருப்பவர்கள் பலர். மாதம் மாதம் இந்த இ.எம்.ஐ.யை கட்டி முடிப்பதற்குள் உயிர் போகிறது என்று புலம்புகிறவர்கள்தான் அதிகம்.
இப்படி புலம்புகிறவர்களில் சிலர், கையில் மொத்தமாக பணம் கிடைக்கும்போது கடனை முன்கூட்டியே கட்டி முடித்துவிடுகிறார்கள். இதனால் சிபில் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்று, உங்களுக்கான மதிப்பெண் குறையும் என சிலர் சொல்லப்போக, முன்கூட்டியே கடன் பணத்தைத் திரும்பக் கட்டியவர்களும், இனி கட்டலாம் என்கிற நினைப்பில் இருந்தவர்களும் கலங்கிப் போயிருக்கிறார்கள். வாங்கிய கடனை முன்கூட்டியே கட்டினால் நஷ்டம் வருமா, வராதா? என இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் (ஓய்வு) டாக்டர் எஸ்.இளங்கோவனிடம் கேட்டோம்.
''வங்கியில் தனிநபர் கடன் ஒரு லட்சம் ரூபாயை, மூன்று வருடத்தில் திரும்பச் செலுத்தும் விதமாக ஒருவர் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக வங்கிக்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். கடன் வாங்கிய ஒரு ஆண்டுக்குள் கடனை திரும்பக் கட்டினால் வங்கிக்கு வட்டி வருமானம் இழப்பு ஏற்படும். இ.எம்.ஐ.யை சரிவர கட்ட முடியாததாலேயே கடனை முன்கூட்டியே கட்டினார் என சிபிலில் பதிவாகும் என பலரும் நினைக்கிறார்கள். இது தேவையில்லாத அச்சம்.
ஒருவர் கடனை முன்கூட்டியே கட்ட பல காரணங்கள் இருக்கும். நிலம் விற்று அதன் மூலமாக பெருந்தொகை கிடைத்திருக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு வெளியிலிருந்து வரவேண்டிய பணம் வந்திருக்கும். இதுபோன்ற சமயங்களில் இருக்கும் கடனை அடைக்கத்தான் பலரும் முயற்சிப்பார்கள். மேலும், அந்தப் பணத்தை முதலீடு செய்தாலும் குறைவான வட்டியே கிடைக்கும். அதோடு வாங்கிய கடனின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் முன்கூட்டியே கடனை அடைக்க நினைப்பார்கள்.
இப்படி செய்வதால் சிபில் பட்டியலில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. மாறாக, நீங்கள் கடனை விரைவாகச் செலுத்துகிறவர் என்றே சிபிலில் பதிவாகும். இப்படி ப்ரீ-குளோஸ் செய்யும்முன் இ.எம்.ஐ. சரியாக கட்டியிருந்தாலே போதும்.
ஆனால், ஒரு வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக வேறு ஒரு வங்கியில் கடன் வாங்கி கடனைக் கட்டினால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிபிலில் உங்களுக்கான மதிப்பெண் குறையாது. ஆனால், உங்கள் மீதான மதிப்பீடுகள் மாறிவிடும். இதனாலும் புதிய கடன்களை வங்கி மேலாளர் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.
சிபில் என்பது கடன் வாங்கியவரின் கடனைத் திரும்பக் கட்டும் திறனை கணக்கிடும் அளவுகோல்தான். பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் தரும்முன்  இந்த அளவுகோலை அவசியம் பார்க்கும். இதை மட்டுமே அடிப்படையாக வைத்து கடன் தரப்படுவதில்லை என்றாலும், இதில் ஒருமுறை பதிவான தகவலை மாற்ற முடியாது.  
ஒரே குடும்பத்தில்..!
ஒரு குடும்பத்தில் ஒருவரின் பெயர் சிபில் பட்டியலில் இருந்தால் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் வரும் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள். புதிய தலைமுறை வங்கிகள் சில இந்தக் கோணத்தில் அணுகுவதாகவும் சிலர் சொல்கிறார்கள். இதுவும் தேவை இல்லாத கவலைதான்.
அதாவது, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் மனைவி தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என சில கடன்களை வாங்கி, அதை சரியாகக் கட்டாமல் செட்டில்மென்ட் செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். பின்னாளில் மகனுக்கு கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் தாயின் சிபில் மதிப்பெண்ணை காரணம் சொல்லி கடனை நிராகரிக்க முடியாது. ஆனால், சில வங்கி மேனேஜர்கள் இதைக் காரணமாகச் சொல்லி கடன் தர மறுப்பதும் உண்மை.
அதேபோல, அதிக தொகை கடனாக கிடைக்கும் என்று நினைத்து இருவர் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, அதில் ஒருவரின் சிபில் மதிப்பெண் குறைவாக இருந்தால் அந்த கடன் நிகாரிக்கப்படும்.
ஒருவருக்கு கடன் வழங்கும்போது கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறன், மாத வருமானம், வேலை பார்க்கும் நிறுவனத்தின் துறை வளர்ச்சி, அந்தத் துறையில் இருவருடைய எதிர்கால வளர்ச்சி என்பதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் கடன் கொடுக்கவேண்டும். இதுதான் நடைமுறை. முதல்முறையாக கடன் வாங்குபவருக்கும் இதைப் பின்பற்றவேண்டும்.
அடமானக் கடன்..!
வீடு, நகை என எதையாவது ஒன்றை அடமானமாக வைத்து அவசரச் சூழ்நிலையை சமாளிப்பது நம்மில் பலருக்கு வழக்கம். ஆனால், இந்த கடனை திரும்பச் செலுத்துவதும் சிபில் பட்டியலில் பதிவாகும். இதில் வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கும்போது மாதத் தவணை கட்டும்படி இருக்கும். தவணை கட்டத் தவறினால் சிபில் மதிப்பெண் குறையும். ஆனால், பெரும்பாலான தங்க நகைக் கடன் தவணையில் திரும்பச் செலுத்தும் விதத்தில் இல்லை. மொத்தமாக திரும்பச் செலுத்தலாம் அல்லது நம்மால் முடிந்த அளவு அவ்வப்போது பணம் கட்டலாம். ஆனால், வட்டியை சரியாக கட்டுவது அவசியம். வட்டிக்கு வட்டி கட்டினால் உங்கள் சிபில் மதிப்பெண் குறையலாம்.  
எந்த ஒரு கடன் வாங்கினாலும் அவருடைய பெயர் சிபில் பட்டியலில் சேர்ந்துவிடும். சிபில் பட்டியலில் அவருடைய மதிப்பெண் எவ்வளவு என்பதைதான் வங்கிகள் பார்க்கும். முடிந்தவரை இந்த மதிப்பெண் அதிகம் பெற முயற்சி செய்யுங்கள்'' என்று முடித்தார் இளங்கோவன்.
லோன் செட்டில்மென்ட்..!
கடன் வாங்கி அதை சரியாகக் கட்டாமல் கடைசியில் செட்டில்மென்ட் செய்தால் என்ன மாதிரியான பிரச்னை வரும் என்பதுகுறித்து பேங்க் பஜார் டாட்காமின் சி.இ.ஓ. அதில் ஷெட்டியிடம் கேட்டோம்.
''திடீர் வேலை இழப்பு, அதிக கடன் சுமை, இனி வேலைக்குச் செல்ல முடியாது, உடல்நலக் குறைவு போன்ற காரணத்தினால்தான் பலரும் இ.எம்.ஐ. கட்ட தவறுகிறார்கள். கடன் வாங்கியவரால் கடனை சரிவர கட்ட முடியவில்லை என்ற சூழ்நிலை உருவாகியதும் கொடுத்த கடனை வசூலிக்கத்தான் வங்கி முயற்சிக்கும். தொடர்ந்து போன் செய்து, வீட்டிற்கு ஆள் அனுப்பிகூட கடனாக தந்த பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும். இம்முயற்சி தோல்வி அடைந்து, இனி கடனாக தந்த பணம்  திரும்ப வராது என்ற சூழ்நிலையில்தான் வங்கி செட்டில்மென்டிற்கு போகும்.
செட்டில்மென்ட் முடிவுக்கு வருவதற்குள் வங்கி உங்களை ஒருவழி ஆக்கிவிடும். கொடுத்த கடன் தொகை வாங்க இதுதான் வழி என வங்கி நினைக்கும்போதுதான் செட்டில்மென்டிற்கு ஒப்புக்கொள்ளும். இதுபோன்ற சமயத்தில் கடன் வாங்கியவருடன் வங்கி பேச்சுவார்த்தை நடத்தும். அப்போது கடன் வாங்கியவர் கட்டவேண்டிய அசல், அதற்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகையைக் கேட்கும். இதில் பெரும்பாலானவர்கள் முடிந்தவரை தங்கள் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி தொகையைக் குறைத்துவிடுவார்கள். இதில் சில சமயங்களின் கடன் வாங்கிய அசல் தொகையைவிட குறைவான தொகைக்குகூட சென்ட்டில்மென்ட் செய்ய வங்கி ஒப்புக்கொள்ளும். இந்த சமயத்தில் கடன் வாங்கியவரும் பெருமையாக வாங்கிய கடனைவிட குறைவான தொகையே கட்டினேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
செட்டில்மென்ட் பணம் தந்தபிறகு செட்டில்மென்ட் கடிதம், பணம் கட்டியதற்கான ரசீது ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். இது எதிர்காலத்தில் தேவைப்படும். இந்தக் கடிதத்தில்தான் வங்கி தனது வேலையை புத்திசாலித்தனமாக சரியாகச் செய்யும். உங்களுக்கு கொடுக்கும் செட்டில்மென்ட் கடிதத்தில் வாங்கிய கடன் தொகையைவிட குறைவான தொகையே திரும்பச் செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லி விடும். இந்த தகவல் அப்படியே சிபில் ரிப்போர்ட்டில் பதிவாகிவிடும். இதில் நீங்கள் தனிநபர் கடன் வாங்கி செட்டில்மென்ட் செய்திருந்தால், உங்களின் சிபில் மதிப்பெண் குறைந்துவிடும். பிற்பாடு வீட்டுக் கடன் கேட்டு வேறு வங்கியில் விண்ணப்பிக்கும் போது, உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையும் மீறி தரப்படும் கடனுக்கு வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும். அதோடு கடனுக்கு ஒருவர் ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என்றும், கடன் தொகைக்கு ஈடான இன்ஷூரன்ஸ் பாலிசிகள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றின் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கும் சூழ்நிலை உருவாகும்.
எனவே, மீதமுள்ள கடனுக்கான வட்டி அதிகம் என்றாலும் பரவாயில்லை. வங்கி கேட்கும் தொகை முழுவதையும் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
 சில ஆயிரங்களை மிச்சப்படுத்துவதாக நினைத்து எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்'' என்றார். 
ஆக கடன் வாங்குபவர்கள் கவனமாக இருப்பது அவசியம்!


தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்!

































logo

இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் - தமிழ்' அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். 

தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், 

இந்த 40 வயது இ-கலைவன். கோவை - சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், 'இ-கலை' கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஓர் ஆண்டு காலம் முழுமையாக உழைத்து, இவர் யுனிகோடில் உருவாக்கி இருக்கும் அகராதியின் பெயர் - ‘களஞ்சியம் அகராதி'.

ஆன்லைனிலும், தொழில்நுட்ப உலகிலும் தாம் கடந்து வந்த பாதையை விவரித்த சேகர், ‘‘நான் பிறந்த ஊர் போத்தம்பாளையம் என்னும் குக்கிராமம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத எங்கள் நெசவு குடும்பம் திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அறிவை கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏதுவாக இல்லை. இந்நிலையில் வானொலியிலும், பத்திரிகைகளிலும் வரும் அறிவியல் சம்பந்தமான் கட்டுரைகளை கேட்டும், படித்தும் ஆராய்ந்தும் திறமையை வளர்த்துக்கொண்டேன்.

எங்கள் கிராமத்து பள்ளியில் நாங்கள் ஆசிரியர்கள் வந்தால் "காலை வணக்கம் ஐயா'' என்றும், அட்டென்டன்ஸ் எடுக்கும்போது "உள்ளேன் ஐயா" என்றும் 10 வருடங்கள் பழகிய நாக்கு, நகரத்துக்கு வந்து “Good morning Sir”, "Present Sir”-ருக்கு பழக பல மாதங்கள் ஆகிவிடும். அந்தப் பள்ளி மாணவர்களிடம் கேட்டால் அவமானமாகிவிடும் என்பதால் அவர்களிடமும் கேட்கமாட்டோம். Dictionary என்பது படிக்கும் காலம் வரை ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். காரணம் அப்பொழுதெல்லாம் வாத்தியார் எழுதி கொடுக்கும் நோட்டு புத்தகங்கள்தான் வீட்டில் வாங்கி தருவார்கள். அதில் Dictionary இருக்காது.

கிராமத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தொடங்கவேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று விளக்கமளிக்கூடியவர்கள் குறைவாக உள்ள காரணத்தால், மாணவர்கள் புரியாமல் படிப்பதனால் கால விரயத்துடன் படித்தது பயனற்றதாக ஆகிவிடுகிறது. அதைப் போக்க அனைத்தும் அடங்கிய எளிமையான ஒரே ஒரு நூல் தமிழில் இருந்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் கணினி, மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவுள்ள புத்தகங்கள் ஏராளம். அவற்றில் வரும் வார்த்தைகளை புரிந்துகொள்வது மாற்று மொழிக்காரர்களுக்கு அதிலும் தமிழ் மொழி கொண்டவர்களுக்கு எப்போதுமே சவால்தான். இன்னும் நிறைய பேருக்கு உச்சரிப்பில் "Message”- “மெஜேஜ்'' ஆகிவிடும், “Fan" - “ஸ்பேன்" ஆகிவிடும்.

இன்றைய கணினி பயன்பாட்டில் இணையத்தில் இருந்து ஏராளமாக நமக்கு வேண்டிய புத்தகங்களை PDF, EBUP போன்ற கோப்புகளில் இலவசமாக Download செய்து கொண்டு படிக்கலாம். ஆனால், இங்கும் பிரச்னை வார்த்தைகளுக்கான பொருள்தான். இணையம் இருந்தால் இணையத்தில் தேடிக்கொள்ளலாம். அதில் நமது கவனமும், நேரமும் வீணாகும். இன்டர்நெட்டில் எலி பிடிக்கபோய் குரங்கை பிடித்து வருவோம்.

பத்தாவது வரை தமிழில் படித்தேன். அதுவரை தமிழில் கற்றதால் ஆங்கிலம், அறிவியல் கணினி சம்பந்தபட்ட வார்த்தைகள் மிகப் புதிதாகக இருந்தன. அதற்கு விளக்கம் தேடி நூலகம் சென்று படிப்பேன். இருந்தபோதும் ஒரு முழுமையாக என் தேடல்களுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென்ற என்னுடைய கனவு கணினியில் சாத்தியம் என்பது புரிந்தது. இது சம்பந்தமான தேடல்களில் கணினி மொழிகளை பலவற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் பிறந்தது.

நான் கணினியில் புரோகிராமிங் கற்றுக்கொள்ள PDF கோப்புகளில் உள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும்போது ஏற்பட்ட இடர்கள் ஏராளம். “For loop”, “If condition”-க்கு எல்லாம் பொருள்தேடியவன் நான். இதைப்போன்ற இடர்பாடுகள் தமிழில் படிப்பவர்களுக்கு இருக்கக்கூடாது என்று அவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. English-English ஏராளமான அகராதிகள் உண்டு. ஆனால், தமிழில் ஒரு சிலவே உண்டு. அவையும் கால மாற்றத்திற்கு ஏற்ப ஒருங்கு குறிக்கு (Unicode) மாற்றமடையவில்லை, அது தவிர, புதிய Windows 7, Windows 8 போன்ற நவீன இயங்கு தளங்களில் இயங்காது. தமிழில் Unicode அகராதிகள் ஆன்லைனில் உண்டு. ஆனால் Desktop-ல் இயங்கும் அகராதி இல்லை. இதன் விளைவாக உருவானதுதான் ‘களஞ்சியம் அகராதி'.

என்னுடைய கணினி அனுபவ அறிவைப் பார்த்து ஒரு சில மென்பொருள் கம்பெனிகள் அழைத்தபோதும், எனக்கு ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாமையால் அந்த வாய்ப்புகள் தவறிவிட்டன. என்னைப் போல சிரமப்படும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற வரையில் HTML, CSS, Javascript, Java, C, C# , SQL, Animation, Electronics மற்றும் Embedded Project போன்றவற்றை தமிழில் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறேன்.

கல்வியில் உயர்ந்த சமுதாயமே உலகின் உயர்ந்த சமுதாயம். அந்த உயர்ந்த நோக்கோடு தான் தமிழக அரசு அனைத்து மாணாக்கர்க்கும் மடிக்கணினி தந்துள்ளது. அதனால் மாணவர்களின் அறிவு மிகவும் மேம்பாடு அடையும். அதற்கு கூடுதல் உந்து சக்தியாக இருக்க கல்வி பயன்பாட்டிற்கான இந்த களஞ்சியம் அகராதி இலவசமாக இணையத்தில் Download செய்துகொள்ளலாம்.

இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் படிப்பை கெடுப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாயத்திற்கும், உலகிற்கும் செய்ய நிறைய கடமைகள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டால் வெற்றியடைவது என்பது நிச்சயம். இந்த உலகில் வெறும் 2% மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீதி 98% Dark Mater-ராக இன்னும் கண்டுபிடிக்கபடாமல் உள்ளன. அதில் வருங்காலத்தில் தமிழகத்தின் கண்டுபிடிப்பின் பங்கு அதிகமாக இருக்கட்டும்.

எனக்கு பிடித்த பொன்மொழி உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். "என்னை தலை குனிந்து படி, உன்னை தலை நிமிரச் செய்வேன்- என்று சொன்னது புத்தகம்."

இந்த உலகம் என்பது நமக்கு சொந்தமல்ல. இதை நம் எதிர்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளோம். அதை பத்திரமாக, நாம் அனுபவிக்கும் இத்தனை வசதிகளுடனும் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் இப்போதுள்ள தலையாய கடமை. எனவேதான் எனது ஆஃப்லைன் அகராதியை இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றார் சேகர்.

களஞ்சியம் அகராதியின் சிறப்புகள்: 


* ஒருங்குகுறி (Unicode) கொண்டு உருவாக்கப்பட்டது.

* 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வார்த்தைகளுக்கான பொருள் கொண்டது.

* 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள் தரும் இணைப்பு வார்த்தைகள்.

* ஆங்கிலம் - தமிழ், ஆங்கிலம் - ஆங்கிலம், தமிழ் - தமிழ் மற்றும் பல்கலைகழகக் பேரகராதி ஆகிய அனைத்து அகராதிகளையும் உள்ளடக்கியது.

* 3000-க்கும் அதிகமான படங்கள்.

* உலக நாடுகளின் கண்டம், வரைபடம், கொடி கொண்டது.

* தமிழில் (Built-in Tamil Typing) தட்டச்சு செய்து வார்த்தைகளுக்கு பொருள் தேடும் வசதி.

* தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துச் சொல்லும் (LH-Michelle & LH-Michael).

* கணினியில் எங்கிருந்தும் ஒரு வார்த்தையை தேர்வு செய்துகொண்டு Shortcut key (Ctrl + ~) அழுத்தினால் வார்த்தைக்கான பொருள் கிடைக்கும்.

* தானியக்க இருமொழித் தேடுதல் (Automatic encoding)

* புதிய வார்த்தை, பொருள் மற்றும் படங்களை பயனாளரே இணைத்து கொள்ளும் வசதி.

* Free Software (இலவச மென்பொருள்)

* தமிழில் முதல் மேஜைபயன்பாட்டு (Windows Desktop) ஒருங்குகுறி (Unicode)  அகராதி.

* Destop-ல் விரும்பிய வார்த்தைகளை விரும்பிய வண்ணங்களில், எழுத்துருக்களில் அமைத்துக் கொள்ளலாம்.

* Windows XP, Windows 7, Windows 8  சார்ந்த இயங்கு தளங்களில் இயங்கும்.

சேகர் உருவாக்கியுள்ள களஞ்சியம் அகராதியை டவுன்லோடு செய்ய க்ளிக்க வேண்டிய இணைப்பு -


*

சேகரின் அதிகாரப்பூர்வ தளம் www.ekalai.com
தொடர்புக்கு - 9790057454

Import duty on gold jewellery increased to 15%




Rajesh Bhayani  |  New Delhi  September 18, 2013 Last Updated at 00:59 IST

In a move aimed at protecting the domestic , the Centre on Tuesday increased the Customs duty on  and silver jewellery by five percentage points to 15 per cent.

Traders had been exploring the possibility of importing jewellery, especially gold, as it is hassle-free and does not attract the Reserve Bank of India’s 80:20 norms, under which 20 per cent of imported gold has to be re-exported. There also was a plan to import only crude jewellery, manufacturing cost of which is hardly one per cent, to avoid the 80:20 rule. The traders were exploring imports from Singapore and Dubai.

However, the government has plugged this loophole by increasing import duty to 15 per cent.

TWIN BENEFITS
The govt’s decision to raise Customs duty on gold jewellery to 15% would:
  • PLUG LOOPHOLE
By importing gold jewellery, instead of gold, traders could have avoided RBI’s 80:20 norms, under which 20 per cent of imported gold has to be re-exported
  • HELP DOMESTIC INDUSTRY
Imported jewellery — mostly machine-made and cheaper because of lower labour cost — could have been hurting Indian jewellery makers’ business

Sudheesh Nambiath, India Analyst at GFMS Thomson Reuters, said: “After the duty on gold was increased to 10 per cent and with new import norms in place, it made sense to import jewellery to meet at least partial requirement, as this was free of hassles. However, duty on jewellery at 15 per cent has killed the benefit that existed.”

In a press note, the  said that jewellery making was a labour-intensive industry, with millions of artisans dependent on this sector for their livelihood.

With no difference in duty on primary metal and jewellery earlier, the note says, “there is an apprehension that Indian jewellery makers would not be able to compete with cheaper imports, particularly when a majority of the imported jewellery is machine-made, compared with hand-made jewellery in India... To protect the interests of small artisans, the Customs duty on articles of jewellery and of goldsmiths’ or silversmiths’ wares and parts thereof is being increased from 10 per cent to 15 per cent”.

Given that labour costs for hand-made jewellery are far higher (at 5-10 per cent of gold value) compared with just 1 per cent for machine-made jewellery, the latest move by the government should provide a level playing field to domestic jewellery makers.

A notification to this effect was issued on Tuesday.