Showing posts with label The Spirit of Thiruvalluvar :. Show all posts
Showing posts with label The Spirit of Thiruvalluvar :. Show all posts

Saturday, November 30, 2013

The Spirit of Thiruvalluvar :வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.




திருக்குறள் 

பொருட்பால் 

 அரசியல்

 ஊக்கமுடைமை

  
அதிகாரம் 60

குறள்  : 595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத் தனையது உயர்வு.

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

With rising flood the rising lotus flower its stem unwinds; 
The dignity of men is measured by their minds.

.
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்







Friday, November 29, 2013

The Spirit of Thiruvalluvar :ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து.

 


திருக்குறள் 

அறத்துப்பால்   

துறவறவியல் 
அதிகாரம் 36
மெய் உணர்தல
குறள்  : 353


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து.


ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத்
தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட
வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.



Heaven is nearer than earth
to those men of purified minds
who are freed from from doubt.
.
  • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

Thursday, November 14, 2013

The Spirit of Thiruvalluvar : அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்




திருக்குறள் 

அறத்துப்பால்
இல்லறவியல் 
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள்  : 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் 

மு.வ : தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, 
பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

The rice in which the little hand of their children
 has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.


  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194






Wednesday, November 13, 2013

The Spirit of Thiruvalluvar : மக்கள்மெய் தீண்டல் .....



திருக்குறள் 

அறத்துப்பால்
இல்லறவியல் 
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள்  : 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.- 

மு.வ : மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: 
அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

Being touched by one's children is the body's delight, 
And listening to their chatters them chatter is joy to the ear.

  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.


Tuesday, November 12, 2013

The Spirit of Thiruvalluvar : அருவினை யென்ப உளவோ...





திருக்குறள் 

பொருட்பால் 
அதிகாரம் 49
காலம்  அறிதல் 
குறள்  : 483 


அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின். - 

மு.வ : (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் 
ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

Can any work be hard in very fact, 
If men use fitting means in timely act?.

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.







Monday, November 11, 2013

The Spirit of Thiruvalluvar :


11 Nov 2013

Britannica :

Little is known about the life of Tiruvalluvar except that he is believed to have lived in Mylapore (now part of Chennai [formerly Madras], Tamil Nadu, India) with his wife, Vasuki. He was probably a Jain ascetic of humble origins who worked as a weaver. Both Buddhists and Shaivites, however, claim him as their own, and he is especially revered by those of low caste.
Tiruvalluvar’s couplets in the Tirukkural are highly aphoristic: “Adversity is nothing sinful, but / laziness is a disgrace”; “Wine cheers only when it is quaffed, but love / intoxicates at mere sight.” Despite Tiruvalluvar’s reasonable tone, many of his ideas were revolutionary. He dismissed the caste system: “One is not great because of one’s birth in a noble family; one is not low because of one’s low birth.” The poet maintained that goodness is its own reward and should not be regarded as a mere means to a comfortable afterlife.
Chennai bus drivers have adopted the poet as their patron saint; his likeness is found attached above the windshields in the vehicles of the city’s official Tiruvalluvar Bus Company.
திருக்குறள் 

பொருட்பால் 
அதிகாரம் 49
காலம்  அறிதல் 

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.- குறள் : 482 

சாலமன் பாப்பையா : காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள