Showing posts with label நித்யஸ்ரீ. Show all posts
Showing posts with label நித்யஸ்ரீ. Show all posts

Thursday, December 20, 2012

பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று(20.12.12) வியாழக்கிழமை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை


B B C தமிழ் :20 டிசம்பர், 2012 - 10:50 ஜிஎம்டி
பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று(20.12.12) வியாழக்கிழமை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அவருக்கு வயது 40.
நித்யஸ்ரீ பழம்பெரும் இசைக்கலைஞர் டி.கே. பட்டம்மாளின் பேத்தியாவார்.
கர்நாடக இசைப் பாடகியான இவர் பல திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார்.
நித்யஸ்ரீ தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள்.
கணவர் மகாதேவன் இன்று மதியம் சென்னை கோட்டூர்புரம் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து, மூழ்கி, இறந்துவிட்டார். தீயனைப்புப் படையினர் உடலை பின்னர் மீட்டனர்.
சென்னை இசைவிழா நடைபெற்று வரும் நேரத்தில் நிகழ்ந்திருக்கும் இச்சம்பவம் கர்நாடக இசை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இன்று கூட நித்யஸ்ரீ அவ்விழாவில் பாடவிருந்தார். ஆனால் அது ரத்து செய்யப்பட்டுவிட்டது.