Wednesday, February 5, 2014

2ஜி அலைக்கற்றை :என்ன இருக்கிறது அந்த ஆடியோவில்?



60 ரெடி சார்.. இன்னும் 20 ரெடி பண்ணிடுறேன்னு சொன்னாரு!
2ஜி அலைக்கற்றை வழக்கில் அடுத்தடுத்த ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. நீரா ராடியா டேப், அகில இந்திய அளவில் சிக்கலைக் கிளப்பியது என்றால், இப்போது ரிலீஸ் ஆகி இருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்பட 17 பேர் கைதாகி அது சம்பந்தமான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் கலைஞர் டி.வி-க்கு வந்ததற்கான ஆதாரங்களை, ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. திரட்டியது. இப்போது அதனை வலுப்படுத்தும் வகையில் ஒரு சி.டி. வலம்வருகிறது. அந்த சி.டி. உரையாடலில் இருக்கும் குரல் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக அதிகாரி ஷரத் ரெட்டி, முன்னாள் உளவுத் துறை டி.ஜி.பி. ஜாஃபர் சேட் ஆகியோரின் குரல்களின் சாயலைப்போலவே இருக்கிறது. 'பொதுவாக எலெக்ட்ரானிக் அடிப்படையிலான குரல்பதிவுகளை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கருத்து சொல்லியிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டும் தி.மு.க. பிரமுகர்கள், 'இது போலியான குரல் பதிவாகக்கூட இருக்கலாம்’ என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
என்ன இருக்கிறது அந்த ஆடியோவில்?
கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரி ஷரத் ரெட்டிக்கும் முன்னாள் உளவுத் துறை டி.ஜி.பி. ஜாஃபர் சேட்டுக்கும் இடையில் நடந்ததாக வெளியாகியிருக்கும் உரையாடல்.

No comments:

Post a Comment