Thursday, January 30, 2014

அடுத்த ஆண்டு நவம்பருக்கு பிறகு கையால் எழுதிய பாஸ்போர்ட்கள் செல்லாது


 dinakaran daily newspaper  30 jan 2014:::::thanks Jts Bala Ram 

புதுடெல்லி:  சர்வதேச விமான போக்குவரத்து நிறுவன உத்தரவுப்படி, உலகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ள கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை மாற்றிக்கொள்ள அடுத்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு அந்த பாஸ்போர்ட்கள் செல்லாததாகி விடும். பின்னர் இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குடியேற்ற நடைமுறை கள் தொடர்பான பிரச்னைகளை தவிர்ப்பதற்காக அவற்றை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் 2001ம் ஆண்டுக்கு முன்பு விநியோகம் செய்யப்பட்டவை. 

பெரும்பாலான நாடுகள் இந்த பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்துவதை படிப்படியாக ஒழித்து விட்டன. பாஸ்போர்ட் அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்ட பிறகு, 2002ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் விவரங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவ ர்கள், இது தொடர்பான அரசு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட புதிய விஷயங்கள் அறிந்து கொள்ள முடியா மல் போய்விடும். மேலும், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களில் உள்ள விவரங்களை கணினிகளால் ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளும் வசதி இல்லை. 

இதுகுறித்து பாஸ்போர்ட் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில்,  ‘கடந்த 2000ம் ஆண்டு வரை 20 ஆண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. அவற்றை வைத்திருப்பவர்களுக்கு காலக்கெடு 24 நவம்பர் 2015க்கு மேல் இருந்தாலும், சர்வதேச விமான போக்குவரத்து நிறுவன உத்தரவுப்படி அவற்றை பயன்படுத்த முடியாது. எனவே  கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட், 20 ஆண்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை காலக்கெடுவுக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment