Thursday, June 7, 2012

புதிய லோகோவை அறிமுகம் செய்திருக்கிறது ட்விட்டர்.


New Logo for Twitter










Gizbolt : 7 june 2012

புதிய லோகோவை அறிமுகம் செய்திருக்கிறது ட்விட்டர். ரெக்கைகட்டி பறந்து கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்களில் ட்விட்டருக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
ட்விட்டர் நிறுவனம் தனது ப்ளூபேர்டு லோகோவை புதிதாக வடிவமைத்திருக்கிறது. இந்த புதிய லோகோவிலும் அதே ப்ளூபேர்டு தான் இருக்கிறது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் இந்த பறவையின்
வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்திருக்கிறது.
இந்த பறவையின் அலகு வானத்தை பார்த்தது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பறவை ஐந்து இறகுகளை கொண்டிருந்தது. அதில் ஒரு இறகுக்கு கத்தரி போட்டுவிட்டதால், இப்போது இந்த புதிய லோகோவில் நான்கு இறகுகள் தான் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த பறவைக்கு ஹேர்கட்டும் செய்யப்பட்டுவிட்டது. தலையில் இருந்த குருவி முடியையும் இப்போது காணவில்லை.
இருப்பினும் இந்த ட்விட்டர் பறவையின் இந்த புதிய லோகோவை பார்க்கும் போது, மிக சுதந்திரத்துடனும், நட்பு பாராட்டும் வகையிலும் பறப்பது போன்ற உணர்வை கொடு்ப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்லையில்லா சுதந்திரத்தையும், தன்நம்பிக்கையையும் குறிக்கிறது இந்த புதிய லோகோ. இந்த புதிய ட்விட்டர் பறவை அதிக உற்சாகத்துடன், இன்னும் பல தேசங்கள் பறக்கும் போல் தெரிகிறது.

No comments:

Post a Comment