Monday, September 5, 2011

தங்க ஈ.டி.எப். திட்டங்களில் வருவாய் 32 சதவீதம் உயர்வு






தகவல்:தினமலர்:செப்டம்பர்:5 :2011



சென்னை : நடப்பு காலண்டர் ஆண்டில் இதுவரை, தங்க ஈ.டி.எப்., திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் மீது, 32 சதவீத வருவாயை முதலீட்டாளர்கள் பெற்றுள்ளனர். 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009ம் ஆண்டு மார்ச் வரையில் இத்திட்டங்களில் மேற் கொள்ளப்பட்ட முதலீடு, 34 சதவீத வருவாயை வழங்கியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் தங்க ஈ.டி.எப்., திட்ட முதலீடு, சராசரியாக 28 சதவீத வருவாயை அளித்துள்ளது. இதே காலத்தில், பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதித் திட்ட முதலீடுகளில், 7.4 சதவீதம் என்ற அளவிற்கே வருவாய் இருந்தது.

நடப்பாண்டு ஏப்ரல்-ஜூலை வரையிலான 4 மாதங்களில், தங்க ஈ.டி.எப்., திட்டங்களில் 1,176 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தில், 260 கோடி ரூபாயாக கிடைத்துள்ளது. சென்ற ஜூன் மாத நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகித்து வரும் தங்க ஈ.டி.எப்., திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு 58 சதவீதம் அதிகரித்து, 5,568 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஜூலை மாதம் 6,119 கோடி ரூபாயாக மேலும் அதிகரித்தது. இது, 2008ம் ஆண்டு மார்ச் மாதம், 483 கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருந்தது.

சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் மூன்று வாரங்களில், தேசிய பங்குச் சந்தையில், தங்க ஈ.டி.எப்., திட்டங்கள் மீது 2,352 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, நடப்பாண்டு கடந்த 7 மாதங்களில், மாத சராசரி வர்த்தகமான 933 கோடி ரூபாயை விட இரு மடங்கு அதிகமாகும்.

No comments:

Post a Comment