Wednesday, September 18, 2013

கல்வி கடன்களால் வங்கிகளுக்கு சிக்கலா ?








தொழிற்துறையில் நிலவும் தொடர் மந்த நிலையால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி கடன்களை வாரி வழங்கி வரும்  நமது வங்கிகள்  கடன்களை திரும்ப வசூலிப்பதில் தற்போது சிக்கலை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. லட்சக்கணக்கில் கடன்களை வாங்கி பட்டங்களை பெற்ற நமது மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வருகிறது. புதிதாக படிப்பை முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும் மாணவர்களுக்கு தற்போது எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூ நடப்பது குறைந்து வருவதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் இதுவரை சுமார் 24 லட்சம் மாணவர்கள் கல்விக்கடன்களை பெற்று உள்ளனர். அதில் ஏறத்தாழ 75 சதவிகித மாணவர்கள் நடுத்தர வகுப்பை சார்ந்தவர்கள். எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற இவர்களின் நம்பிக்கை தொழிற்துறை
 தற்போது சந்தித்து வரும் நெருக்கடியால் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. 2006-07-ம் ஆண்டுகளில் 2 சதவிகிதமாக இருந்த கல்வி வராக்கடன் தற்போது 6 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.

 இதனால் வங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. புதிய வேலைவாய்ப்பில் மந்தநிலை, கல்விக்கடனை திருப்பி செலுத்துவதில் இழுபறி  போன்ற காரணிகளால்  சத்தமில்லாத ஒரு  நெருக்கடி நிலையை மாணவர்கள் சந்தித்து வருகிறார்கள். 

இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் கல்விக்கடன் வழங்குவதை வங்கிகள் மறுபரிசீலனை செய்வதோடு அரசும் இதுகுறித்து விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கலாம். இதனால் கோடிக்கணக்கான இந்திய  இளைஞர்களின் கல்வி கேள்விக்கு உள்ளாகலாம்.
 இவற்றை எல்லாம் சரி செய்து மாணவர்களின் எதிர்கால நலனையும், வங்கிகளின் வராக்கடன் அச்சதையும் போக்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமை.

No comments:

Post a Comment