Thursday, May 31, 2012

விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன்

 Viswanathan Anand Became World Champion


ஒன்இந்தியா :புதன்கிழமை, மே 30, 2012, 19:23
மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இஸ்ரேலை சேர்ந்த போரீஸ் ஜெல்பாண்டை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன், இஸ்ரேலின் போரீஸ் ஜெல்பாண்டு இடையே கடும் போட்டி நிலவியது.
 
மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இறுதிப் போட்டியில் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் பெற்று வெற்றியாளரை முடிவு செய்ய முடியாமல், போட்டி டை பிரேக்கருக்கு சென்றது. முதல் சுற்று டை பிரேக்கரில் முடிய, 2வது போட்டியில் காய்களை விரைவாக நகர்த்திய ஆனந்த்தின் தாக்குதலில் ஜெல்பாண்டு திணறினார்.

அடுத்தடுத்து சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த், 1 வெற்றி, 3 டிரா மூலம் 2.5 புள்ளிகளை பெற்றார். ஆனால் ஜெல்பாண்டு சில தவறான காய் நகர்த்தல் மூலம் புள்ளிகளை பெற முடியவில்லை. இதன் மூலம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


கடன் தரலாமா இல்லையா என்பதை சொல்லும் சிஐபிஐஎல்

 

குட்ரிட்டன்ஸ்:31 May 2012

ஒரு நபரின் கடன் குறித்த விவரங்களைத் திரட்டி வழங்கும் அமைப்பு தான் (Credit Information Bureau of India- CIBIL) எனப்படும் இந்திய கடன் தகவல் பணியகம் ஆகும்.

இந்த அமைப்பில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தாங்கள் கடன் கொடுத்த நபர்களின் பட்டியலை இந்த அமைப்புடன் பகிர்ந்து கொள்கின்றன. இதன்மூலம் கடன் வாங்கியவர் குறித்த முழு விவரங்களையும் மற்ற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு வங்கியில் வாங்கிய கடனை சரியாக செலுத்தாத நபருக்கு இன்னொரு வங்கி கடன் கொடுப்பதைத் தவிர்க்க இந்த அமைப்பு வழங்கும் கிரெடிட் இன்பர்மேசன் ரிப்போர்ட் (CIR) உதவுகிறது.

டெல்லியில் ஸ்டேட் பாங்கில் கடன் வாங்கிய ஒருவர் அதை சரியாக திருப்பிச் செலுத்தாமல் பெங்களூரில் எச்டிஎப்சி வங்கியின் கடன் கோரி விண்ணப்பித்தால், அவரது ஸ்டேட் வங்கி கடன் குறித்த தகவலை இந்த சிபில் அறிக்கை தெரிவித்துவிடும்.

இந்த அறிக்கையை கடன் வாங்கியவர்களும் கூட கேட்டுப் பெற முடியும். இதன்மூலம் நமது பெயரையோ, அடையாள அட்டையையோ, பாஸ்போர்ட் காப்பியையேயா அல்லது டிரைவிங் லைசென்ஸையோ சான்றாகத் தந்து வேறு யாராவது நமக்கே தெரியாமல் நமது பெயரில் கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

இதைப் பெற ரூ. 142 தான் செலவாகும். சிபில் டிரான்ஸ் யூனியன் ஸகோர் பிளஸ் என்ற முழு விவரததையும் பெற ரூ. 450 செலவாகும்.

பான் கார்ட், அடையாள அட்டை, வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட சில அடிப்படை சான்றுகளின் நகல்களுடன் இந்த அறிக்கையைக் கேட்டுப் பெறலாம். 


இதில் உங்களது விவரங்களில் ஏதாவது தவறு இருந்தால் உடனே சம்பந்தப்பட்ட வங்கியையோ அல்லது நிதி நிறுவனத்தை அணுகலாம். இதையடுத்து இந்திய கடன் தகவல் பணியகம் அமைப்பை நாடலாம். நீங்கள் பிரச்சனையை சொன்ன 30 நாட்களுக்குள் உங்களது தகவல்களை சரி செய்ய வேண்டியது நிதி நிறுவனம், வங்கி மற்றும் இந்திய கடன் தகவல் பணியகத்தின் கடைமையாகும்.

அதை அவர்கள் செய்யத் தவறினால் நுகர்வோர் மையத்தை நாடி வழக்குத் தொடர உரிமை உண்டு.

சிபிலிடம் சிக்காமல் இருப்பது எப்படி?:

- கடனோ, கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்துவதோ, காப்பீட்டுக்கு பணம் செலுத்துவதோ அதை மிகச் சரியான நேரத்தில் செலுத்திவிட வேண்டும்.

-லேட் பேமண்ட், காசோலை போட்டாலும் பணம் இல்லாமல் திரும்பி வருவது ஆகியவற்றுக்கு இந்திய கடன் தகவல் பணியகத்தால் பிளாக் மார்க் போடப்படும்.

-கிரெடிட் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவது, பணத்தை உரிய நேரத்தில் செலுத்துவது கடன் தர வரியை அதிகரிக்கும்