ஒவ்வொரு நாட்டிற்கும் சட்ட ரீதியான பணம் என்று ஒன்று உண்டு. நம் நாட்டின் ரூபாய், பைசா என்று நம் பணத்தை அலகுகளாகப் பிரித்துள்ளோம். இதில் ஒரு ரூபாயும் அதற்குக் குறைவான பைசாக்களும் மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிடுவதாகவும், இரண்டு ரூபாயும் அதற்கு மேல் உள்ள அளவுகளுக்கு ரூபாய்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாகவும் முன்பு ஒரு முறை பார்த்தோம்.

இவை மட்டுமல்லாமல், வங்கிகளில் உள்ள வைப்புக் கணக்குகளும் பணத்திற்கு சமமானவை. ஏனெனில், நாம் கொடுக்க வேண்டிய பணத்தை ஒரு காசோலை மூலமாகச் செலுத்தலாம். 

அரசும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் செலுத்துவதற்கு காசோலை அல்லது ஒரு demand draft-ஐ பயன்படுத்த நிர்பந்திக்கிறது. மேலும் நாம் எப்போது வேண்டுமானாலும் வைப்பு கணக்கில் உள்ள பணத்தை எவ்வித நஷ்டமும் இல்லாமல் எடுக்க முடியும்.

ஒரு நாட்டில் இருப்பில் உள்ள பணத்தின் அளவை எப்படி அளவிடுவது? இதனை பல்வேறு நிலைகளில் அளவிடும் முறைகள் உண்டு. Reserve money, M1, M2, M3, மற்றும் M4.
முதலில் Reserve Money என்று ஒன்று உண்டு. பொது மக்களிடம் புழக்கத்தில் உள்ள காசு வில்லைகள், ரூபாய் தாள்கள், ரிசர்வ் வங்கியிடம் உள்ள வங்கிகளின் வைப்பு நிதி, ரிசர்வ் வங்கியிடம் உள்ள மற்ற வைப்பு நிதிகள் ஆகிவற்றின் கூட்டுத்தொகையே Reserve Money.
M1 என்பது பொது மக்களிடம் உள்ள பணம், வங்கிகளில் உள்ள வைப்பு தொகை, ரிசர்வ் வங்கியிடம் உள்ள மற்ற வைப்பு தொகைகள் ஆகியற்றின் கூட்டுத்தொகையாகும்.

M2 என்பது, M1+ தபால் துறையில் உள்ள வைப்பு நிதி.
M3 என்பது M2+ வங்கிகளில் உள்ள நீண்டகால வைப்பு நிதி.
M4 என்பது M3+ தபால் துறையில் உள்ள வைப்பு நிதி.

நம் சொத்துகளை பணமாகவோ அல்லது வேறு பொருளாகவோ, நிதி பத்திரங்களாகவோ வைத்துக்கொள்ளலாம். ஆனால் நம் சொத்துகளை எளிதில் பணமாக மாற்றக்கூடிய தகுதி உடைய எதுவும் பணத்திற்கு நிகரானது. ஒரு சொத்தை எவ்வித நஷ்டமும் இல்லாமல் பணமாக மாற்றக்கூடிய தன்மைக்கு பெயர் நீர்ப்புத்தன்மை (liquidity).
Reserve Money உள்ள எல்லாமே பணம்தான். M1 உள்ள வங்கி வைப்பு நிதியையும் எப்போது வேண்டுமானாலும் எளிதில் பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால் Reserve Money-க்கு அடுத்தபடியாக நீர்ப்புத்தன்மை உள்ளது. இதே போல் அடுத்தடுத்த நீர்ப்புத்தன்மைகள் உள்ள பண இருப்பாக M2,M3, மற்றும் M4 உள்ளன என்பதை அறியலாம்.