Thursday, April 12, 2012

Quote Gems ― Karen E. Quinones Miller










“When someone tells me "No," 




 it doesn't mean I can't do it,




 it simply means I can't do it with them.” 





― Karen E. Quinones Miller

சென்னையில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்-கட்டடங்கள் ஆடின-மக்கள் ஓட்டம்-பெரும் பீதி!




ஒன்இந்தியா  புதன்கிழமை, ஏப்ரல் 11, 2012, 14:35 [IS


சென்னை: சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டும் கட்டடங்களை விட்டும் வெளியேறினர்.

சென்னையில் பிற்பகல் 2.15 மணிக்கு 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, மாலை 4.19 க்கு மீண்டும் லேசான நில அதிர்வுகளை சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.4 புள்ளிகளாக இருந்தது. இதைத் தொடர்ந்து 5.45 மணிக்குள் அடுத்தடுத்து மேலும் இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன


கடலோரத் தமிழகம் முழுவதும் போலீஸாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு மீட்புப் படையினரும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.

அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர்.




சென்னை மெரீனா கடற்கரை வெறிச்சோடிப் போனது. கடற்கரைக்கு காற்று வாங்க வந்தோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.





யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. அனைவரும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதேபோன்ற நிலநடுக்கத்தையும், ஆட்டத்தையும் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர். சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் நகர் முழுவதும் பெரும் பீதி காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்கள், அலுவலகங்களை விட்டும் வெளியேறியுள்ளனர்.









தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், கோடியக்கரை உள்பட ல இங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நந்தனம் 8 மாடி கட்டடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்

நந்தனம் பகுதியில் உள்ள சேவை வரி விதிப்பு (service tax) அலுவலகம் அமைந்துள்ள 8 மாடி கட்டடம் குலுங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.








நில அதிர்வு குறித்து உணர்ந்தவர்கள் கூறியதாவது:

2மணி 15 நிமிடத்தில் கட்டடம் திடீரென்று குலுங்கியது. யாரோ தள்ளிவிட்டது போல உணர்ந்தோம். உடனே பதறியபடி வெளியேறிவிட்டோம் என்று கூறினர்.
 
கடைகள் அடைப்பு

சென்னையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் அடுத்து லைட்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் அருகில் உள்ள கோல விழியம்மன் கோவிலில் தஞ்சமடைந்தனர். கடற்கரை சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.






சைதாப்பேட்டை, தி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியுடன் அலுவலகங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறினர்.இதனால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக ஊழியர்களும் ஓட்டம்

இதேபோல சென்னை தலைமைச் செயலக அலுவலகப் பகுதியிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆடியதால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் செல்போன் சேவைகளும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சென்னையில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அலுவலகங்களுக்கு சென்றவர்கள் அடித்து பிடித்து வீடுகளுக்கு செல்ல முயன்றதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலைகளில் நகரக் கூட இடமில்லாத அளவுக்கு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வாகனங்கள் நின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 




 
இதேபோல பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், இப்பகுதிகளில் உள்ள மீனவர் குடியிருப்புகள், வீடுகளில் குடியிருப்போர், திருவான்மியூர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதகிளிலும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடற்கரை முழுவதிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
இதேபோல கடலூர், நாகப்பட்டனம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

கடும் கடல் சீற்றம்

இதற்கிடையே, கடலோரங்களில் பல இடங்களில் கடல் சீற்றம் கடுமையாக இருந்தது. ராமநாதபுரத்தில் ராட்சத அலைகள் எழுந்து வந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்து ஓடினர்.



 எச்சரிக்கை முறைப்படி திரும்பப் பெறப்பட்டுள்ளது.  

முன்னதாக முதலில் புதுவையில் 4.30மணிக்கும், சென்னையில் 5 மணிக்கும் சுனாமி தாக்கலாம் என கூறப்பட்டிருந்தது. பின்னர் இது புதுவையில் 6.30 மணி வரையிலும், சென்னையில் இரவு 7 மணி வரையிலும் எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த எச்சரிக்கை முறைப்படி திரும்பப் பெறப்பட்டுள்ளது. 





சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்த நிலையில் பூகம்பம் தாக்கி 4 மணி நேரங்கள் கடந்து விட்டதால் தற்போது சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தமானில் 3.9 மீட்டர் உயர அலைகள் தாக்கலாம்

முன்னதாக அந்தமான் கடலோரத்தை 3.9 ரிக்டர் அளவிலான சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிமிடம் வரை எந்தத் தாக்குதலும் ஏற்படவில்லை.