Monday, October 29, 2012

அரிசி ஏற்றுமதி: இந்தியா முதலிடம்



தினமலர்;அக்டோபர் 29,2012,15:23 IST

புதுடில்லி : 2012ம் ஆண்டில் உலகில் அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

2011ம் ஆண்டு 10.65 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் இருந்த தாய்லாந்து தற்போது 6.5 மில்லியன் டன்களுடன் 3வது இடத்தில் உள்ளது.

2012ம் ஆண்டு 9.75 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.

 இப்பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து 2வது இடத்தில் வியட்நாமும், 3வது இடத்தில் தாய்லாந்தும், 4வது இடத்தில் பாகிஸ்தானும், 5வது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

 2011ம் ஆண்டு இந்தியா 3வது இடத்தில் இருந்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை நல்லமுறையில் இருந்ததால் 104.32 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. 2012ல் உலக அரிசி உற்பத்தி 464.87 மில்லியன் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment