Wednesday, April 4, 2012

ஐ.பி.எல்: சென்னையை எளிதில் வீழ்த்தியது மும்பை!

Vikatan :4 April 2012::23.04


சென்னை: ஐ.பி.எல். சீசன் 5 முதல் ஆட்டத்தில், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதில் வீழ்த்தியது. 


சென்னை - சிதம்பரம் மைதானத்தில் நடந்துமுடிந்த இப்போட்டியில், 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஹர்பஜன் தலைமையிலான மும்பை அணி, 16.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்தது. 


அதிரடியாக பேட்டிங்கைத் துவங்கிய லெவி, 35 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பொலிஞ்சர் பந்துவீச்சில் கையில் காயம் ஏற்பட்டதால் பெவிலியன் திரும்பினார்.


அப்போது களமிறங்கிய ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிராங்க்ளின் 25 ரன்களையும், ராயிடு 18 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 


பேட்டிங்கில் சொதப்பல்...


முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்னிங்ஸ்சில், 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


அணியில் அதிகபட்சமாக, சுரேஷ் ரெய்னா 36 ரன்களையும், பிராவோ 19 ரன்களையும் எடுத்தனர். முரளி விஜய், பத்ரிநாத் ஆகியோர் தலா 10 ரன்கள் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 


ரெய்னா தவிர மற்ற அனைவரின் சொதப்பலான ஆட்டம், ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது.


மும்பை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மலிங்கா, ஒஜா மற்றும் பொலார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

No comments:

Post a Comment