Tuesday, July 29, 2014

வங்கிகளின் தலைவர்களை சந்திக்கிறார் அருண் ஜேட்லி




தி இந்து:செவ்வாய், ஜூலை 29, 2014

பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை இம்மாதம் 31-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை ஜேட்லி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் விதிக்கும் கடனுக் கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கூட்டத்தில் ஜேட்லி வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. 

அனைத்து குடும்பத்துக்கும் வங்கிச் சேவை என்ற புதிய திட்டத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க உள்ளார். 

அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்படும் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment