Monday, December 2, 2013

பெய்யெனப் பெய்கிறது மழை.. ஜில்லென நனைகிறது சென்னை

பெய்யெனப் பெய்கிறது மழை.. ஜில்லென நனைகிறது சென்னை

சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.ப
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 24 மணி நேரத்திற்கு கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னையில் நேற்று முதலே பரவலாக மழை ஆரம்பித்து விட்டது.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
சென்னையில் இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் போதிய மழை பெய்யவில்லை. வந்த 3 புயல்களும் கூட திசை மாறி ஆந்திரா பக்கம் போய் விட்டதால் சென்னைக்கும், தமிழகத்திற்கும் இதுவரை போதிய மழை கிடைக்காத நிலையே காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதைய புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
சென்னையில் கடந்த பல நாட்களாகவே மழை. சில நாட்களாக நல்லவெயிலைக் காண முடிந்தது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.
ஆனால் நேற்று முதல் நிலைமை மாறியது. நல்ல குளுமை குடியேறியது. இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. நேற்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மேல் பல பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. புறநகர்ப் பகுதிகளிலும் நிறுத்தி நிதானமாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று என்று வானிலை மையம் அறிவித்துளள்ளளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
விடுமுறையை எதிர்பார்த்து ஏமாந்த மாணாக்கர்கள்
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக செய்திகள் வந்தவுடனேயே பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் பலர் ஆவலாக இருந்தனர். ஆனால் காலை பள்ளிக்குப் புறப்படும் வரை அப்படி ஒரு அறிவிப்பே வராததால் வேறு வழியில்லாமல் பள்ளிக்குப் போனார்கள் மாணவர்கள்.
ஆனால் அவர்கள் போன கொஞ்ச நேரத்திலேயே மழை வந்தது
சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. போர்வையால் மூடியது போன்ற தோற்றத்தில் நகரை சூழ்ந்துள்ள கருமேகங்களிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், அடையாறு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, பாரிமுனை, தேனாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. 
பலத்த மழை காரணமாக வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் போதிய வெளிச்சமின்றி தவிக்கின்ற சூழல் உள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதும் வாகன ஓட்டிகளை கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.  மணலி, எண்ணூர், திருவொற்றியூர், தண்டையார்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. 
பெய்யெனப் பெய்கிறது மழை.. 
ஜில்லென நனைகிறது சென்னை

No comments:

Post a Comment