கோல்கட்டா:இந்திய வங்கித் துறை, அடுத்த 18-24 மாதங்கள் வரை மீண்டும் எழுச்சி காண வாய்ப்பில்லை என, தர ஆய்வு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், இந்திய வங்கித் துறை குறித்து, "மீட்சியை தடுக்கும் பொருளாதார மந்தநிலை' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:வங்கிகள், பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது குறைந்து வருகிறது.
இது, அடுத்த இரண்டு ஆண்டுகளில், வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.சென்ற 2012-13ம் நிதியாண்டில், வங்கிகளின் மொத்த கடனில், வ‹லாகாத கடன், 3.4 சதவீதமாக இருந்தது.
இது, நடப்பு 2013-14ம் நிதியாண்டில், 3.9 சதவீதமாகவும், வரும் 2014-15ம் நிதியாண்டில், 4.4 சதவீதமாகவும் உயரும்.
மேலும், சொத்துக்களின் மீதான வருவாயும், 0.9 சதவீதமாக குறையும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் அண்டு பி நிறுவனத்தின் ஆய்வாளர் (கடன் பிரிவு) கீதா சுக், "எதிர்பார்த்ததை விட, பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற மதிப்பீடு, ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கம், வட்டி விகித உயர்வு உள்ளிட்ட காரணங்களால், நடப்பு நிதியாண்டில், நிறுவனங்கள் துறை, ஓரளவிற்காவது மீண்டெழும் என, மதிப்பிட முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
சென்ற மார்ச்சுடன் முடிந்த 2012-13ம் நிதியாண்டில், வங்கிகள் அவற்றின் மொத்த கடன் நிலுவையில், 5.7 சதவீத கடனை, மறுசீரமைப்பு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ் அண்டு பி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை, இந்திய வங்கித் துறையில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment