Wednesday, March 20, 2013

ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்"பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்







தினமலர் : மார்ச் 19,2013,23:28 IST

புதுடில்லி: ஐம்பதாயிரம் மற்றும் அதற்கு மேலான தொகைக்கு தங்கம் வாங்கினால், இனிமேல், "பான் நம்பரை' தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது, 5 லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகள் அல்லது 2 லட்சம் ரூபாய்க்கு தங்க கட்டிகள் வாங்கினால், அப்போது, வருமான வரி கணக்கு எண்ணை - பான் நம்பரை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என, உள்ளது

. இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்கினாலே, பான் நம்பரை தெரிவிக்க வேண்டும்.தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின், பான் நம்பர் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்களை, வர்த்தகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

.பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி, தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களை விற்பனை செய்வோர், தங்களின் வாடிக்கையாளர்கள் விபரங்களை அறிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தங்களிடம் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயர், விவரங்களை, வர்த்தகர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.

 அரசு அதிகாரிகள் கேட்கும் போது, அவற்றை காண்பிக்க வேண்டும்

.மத்திய அரசின் இந்த முடிவால், தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை குறையும் அல்லது புதுவித மோசடிகள் துவங்கும் என, கூறப்படுகிறது.



No comments:

Post a Comment