Sunday, February 5, 2012

இப்போது இந்தியர்கள் 'முகம் பார்ப்பதே' பேஸ்புக்கில்தான்!

Facebook


ஆதாரம் :ஒன்இந்தியா :சனிக்கிழமை, பிப்ரவரி 4, 2012, 12:30


நியூயார்க்: சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 


இன்றைக்கு ஒருவர் முகத்தை ஒருவர் நேரில் பார்க்கிறார்களோ இல்லையோ... பல முறை பேஸ்புக்கில் பார்த்துக் கொள்கிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பதைவிட பேஸ்புக்கில் பார்ப்பதே அதிகம் என்று கிண்டலடிக்கும் அளவு facebook addiction அதிகரித்துவிட்டது.

ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.



 அதன்படி கடந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளது.சீனாவில் சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளிவிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment